தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே  மின்வயர் திருட்டு

விருதுநகர் அருகே டவர் அமைக்கும் இடத்தில் மின்வயரை திருடிய மர்ம நபர் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே டவர் அமைக்கும் இடத்தில் மின்வயரை திருடிய மர்ம நபர் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(23). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக இருந்து வரும் நிலையில், டவர் அமைக்கும் பணியினையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல் விருதுநகர் அருகே ஐ.சி.ஏ காலனியில் நடந்து வரும் டவர் பணிகளைச் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு வைத்திருந்த காப்பர் வயரை யாரோ மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாராம். இதைப்பார்த்து பொறியாளர் துரத்திய நிலையில் உடனே பைக்கில் தப்பியோடினாராம். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் பொறியாளர் யோகேஸ்வரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மின்வயரை திருடிச் சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT